Wednesday 11 January 2012

முல்லை பெரியாறுக்கு சரியான நேரம் இதுதான்

முல்லை பெரியாறுக்கு சரியான நேரம் இதுதான்
இந்த நேரத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் உச்ச நீதிமன்றம் நம்மிடம் புதிய அணை கட்ட உங்களது கருத்து என்ன வென்று கேட்டுள்ளது அதனால்தான் சொல்கிறேன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் நாம் நமது உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது தற்பொழுது  பிரச்சனை பெரியதாக உள்ளதால் தமிழக மக்கள் விழிப்புணர்வாக உள்ளதால் இரண்டு மாநில மக்களையும் சமாதான படுத்துவதற்காக உச்ச நீதிமன்றம் தற்போது உள்...ள 136 அடியையே கடை பிடிக்கலாம் என உத்தரவிடலாம் இரண்டு மாநிலத்திற்கும் பிரச்சனை வராமலிருக்கவும் தற்போது பிரச்சனை யை சில காலத்திற்கு அமைதியாக வைக்கவும் இப்படி சொல்ல வாய்ப்புள்ளது ஆனால் தமிழக மக்களே நாம் ஏமாந்து விடக்கூடாது 27 -02 -2006   அன்று உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை அமல்படுத்தும்வரை(142 அடி ) நமது  போராட்டம் தொடரவேண்டும் இது எனது வேண்டுகோள் மத்திய அரசு கேரளா மக்களின் ஆதரவை பெருவதற்காக இந்தமாதிரியும் செய்யலாம் அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்கேரளமுதல்வர் உம்மன்சாண்டி "முல்லைப்பெரியார் அணை விஷயம் தொடர்பாக தமிழ்நாடும் கேரளாவும் நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்கலாம்" என்கிறார்.வெளியே பேச்சு வார்த்தை நடத்தவேண்டிய ஒரு அவசியமும் இல்லை. வெளியே பேச்சுவார்த்தை நடத்தினால் 999 வருட ஒப்பந்தம் அடிபட்டுப்போகும். நான் இந்த உம்மன் சாண்டிக்கு ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்க்கு பதில் சொல்லட்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் அந்தகேள்விக்கு பதில் அளித்தால்,?!!! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல அதிக காலம் எடுத்துக்கொள்ளும் அதுவரை எம்மக்கள் அணை உடைந்துவிடும் என்றபயத்திலேயே வழ வேண்டும் எனவே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என கூறுகிறீர்கள் சரிதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல கால தாமதம் ஆகும்தான், 27 -02 -2006  அன்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்ததே அதை இன்றுவரை கடைபிடித்ததுண்டா????!!!!!!!!!!!!!! இதற்க்கு பதில் சொல்லுங்கள்,,,,நீங்கள் பேச்சு  வார்த்தைக்கு அழைப்பதே எப்படி இருந்தாலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு நாங்கள் மதிப்பு அளிக்க போவதில்லை (தீர்ப்பை அழிக்கத்தான் போகிறோம் ) பின் எதற்காக கால தாமதம் செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தானே இந்த கருத்தை சொல்லிருக்கிறீர்கள் திரு உம்மன் சாண்டி அவர்களே!!!!!!!!! தமிழர்களே கேரளா முதல்வரின் மனதை புரிந்துகொள்ளுங்கள் அவர் நமக்கு நல்லதுதான் சொல்கிறார் அவர் எப்படியும் தீர்ப்பை மதிக்க மாட்டார் அதனால் காலம் தாழ்த்தாதீர்கள் நமது உரிமைக்காக போராட்டத்தை வலுப்படுத்துங்கள்  

No comments:

Post a Comment