Wednesday 18 April 2012

விவசாயி

உலகில் தான் உருவாக்கிய பொருளுக்கு தன்னால் விலை நிர்ணயம் செய்ய முடியாதவன் (தெரியாதவன்) ஒரே ஒரு வியாபாரி அவன் விவசாயி மட்டும்தான் என்று சொல்கிறோம் நாம், ஆனால் இதுவரை விவசாயின் வாரிசாக பிறந்து பல்வேறு விவசாயின் வாரிசுகள் தற்பொழுது நன்றாக படித்தும் நல்ல வேளையிலும் நல்ல தகுதியில் இருந்தும் என் தாய் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தது கிடையாது.

 அதாவது தன்னை வளர்த்தெடுக்க சமுதாயத்தில் தன்னை அடையாளபடுத்தி கொள்ளவும் தன்னை நிலை நிறுத்திகொள்ளவும் தன் முன்னேற்றத்திற்கு துணையாக இருந்த விவசாயத்தை நாம் நினைத்துகூட பார்ப்பதில்லை விவசாயின் குடும்பத்தில் பிறந்து அதன் அருகிலேயே வளர்ந்து அதன் அருமை தெரியவில்லை நமக்கு.

 அவ்வளவு ஏன் ஒரு சின்ன விடயம் அதனையே கூட நாம் கருத்தில் கொள்வதில்லை அதாவது விவசாயின் வாரிசு நம்மால் அவர்களுக்கு எப்படி விலை நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்லிதர முடியும் ஆனால் நாம் அதைப்பற்றி பேசுகிறோமே தவிர அதைப்பற்றி நமது பெற்றோர் விவசாயியாக இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கே சொல்லித்தருவதில்லை அதைப்பற்றி பரிதாப படுகிறோம் இனியாவது நாம் கற்றுக்கொடுப்போம்.

No comments:

Post a Comment